கிரிக்கெட் (Cricket)

MI நியூயார்க் அணி கேப்டனாக நிக்கோலஸ் பூரன் நியமனம்

Published On 2025-06-11 16:05 IST   |   Update On 2025-06-11 16:05:00 IST
  • 29 வயதான நிக்கோலஸ் பூரன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து திடீரென்று ஓய்வு அறிவித்தார்.
  • அமெரிக்காவில் நடைபெறும் எம்எல்சி 2025 தொடருக்கான MI நியூயார்க் அணி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் நிக்கோலஸ் பூரன். இவர் விக்கெட் கீப்பராக செயல்படக் கூடியவர். 29 வயதான இவர், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இந்த நிலைியல் அமெரிக்காவில் நடைபெறும் எம்எல்சி டி20 லீக் தொடரில் எம்ஐ நியூயார்க் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

2023ஆம் ஆண்டும் எம்எல்சி தொடர் தொடங்கப்பட்டது. இந்த தொடரில் 388 ரன்கள் விளாசி அதிக ரன்கள் விளாசி வீரராக திகழ்ந்தார். இறுதிப் போட்டியில் ஆட்டமிழக்காமல் 137 ரன்கள் அடித்து எம்ஐ நியூயார்க் சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.

டி20 கிரிக்கெட்டில் பவர் ஹிட்டராக திகழ்ந்து வருகிறார். 2024ஆம் ஆண்டு அனைத்து டி20 போட்டிகளிலும் 170 சிக்சர்கள் விளாசினார். 2025 ஐபிஎல் சீசனில் முதன்முறையாக 500 ரன்களை கடந்தார். 40 சிக்சர்கள் விளாசினார்.

2025 எம்எல்சி சீசன் நாளை தொடங்குகிறது. 13ஆம் தேதி எம்ஐ நியூயார்க், டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. மொத்தம் ஆறு அணிகள் இந்த தொடரில் விளையாடுகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணி பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறும்.

Tags:    

Similar News