கிரிக்கெட் (Cricket)

ஓய்வு அறிவித்து ஷாக் கொடுத்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் - ஆஸி.க்கு மற்றொரு பேரிடி

Published On 2025-02-06 12:24 IST   |   Update On 2025-02-06 12:24:00 IST
  • நட்சத்திர வீரர்களில் ஒருவர் மார்கஸ் ஸ்டோய்னிஸ்.
  • வேறொரு வீரர் இடம்பெறுவார் என்று தெரிகிறது.

உலகக் கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்ற மார்கஸ் ஸ்டோய்னிஸ் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். எனினும், தொடர்ச்சியாக டி20 கிரிக்கெட் போட்டியில் கவனம் செலுத்துவதாக அறிவித்து இருக்கிறார்.

இன்னும் சில வாரங்களில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஓய்வு அறிவித்து இருக்கிறார்.

முன்னதாக சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் இடம்பெற்று இருந்தார். இந்த நிலையில் இவர் ஓய்வை அறிவித்துள்ளார். இதையடுத்து சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் ஸ்டோய்னிஸ்-க்கு பதில் வேறொரு வீரர் இடம்பெறுவார் என்று தெரிகிறது.

35 வயதான மார்கஸ் ஸ்டோய்னிஸ் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் டி20 கிரிக்கெட் தொடரில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். சமீபத்திய போட்டிகளின் போது ஸ்டோய்னிஸ் காயத்தில் அவதியுற்றதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. இந்த நிலையில், நட்சத்திர வீரர் ஸ்டோய்னிஸ் ஓய்வு அறிவித்து இருப்பது அந்த அணிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News