கிரிக்கெட் (Cricket)

சஞ்சீவ் கோயங்கா எப்படிப்பட்டவர்: கே.எல்.ராகுல் ஓபன் டாக்

Published On 2024-11-29 13:26 IST   |   Update On 2024-11-29 13:26:00 IST
  • ரிஷப் பண்டை லக்னோ அணியும், கேஎல் ராகுலை டெல்லி அணியும் ஏலம் எடுத்தது.
  • சஞ்சீவ் கோயங்கா, toxic boss என்று கேஎல் ராகுல், ரிஷப் பண்ட்டிடம் கூறுவது போல மீம்ஸ் வெளியாகி வைரலானது.

2024 ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் அணியுடன் 10 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணி தோல்வியடைந்தது. இப்போட்டியின் முடிவுக்கு பின்னர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா அணியின் கேப்டன் கேஎல் ராகுலிடம் கடுமையாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் கேஎல் ராகுலின் ரசிகர்கள் மட்டுமின்றி பல முன்னாள் வீரர்களும் சஞ்சீவ் கோயங்காவின் செயலுக்கு கண்டனங்களை தெரிவித்தனர்.

இதனையடுத்து வரும் ஐபிஎல் தொடரில் லக்னோ அணி கே.எல். ராகுலை தக்க வைக்கவில்லை. இந்நிலையில் நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் கே.எல்.ராகுலை 14 கோடிக்கு டெல்லி அணி வாங்கியது.

இந்நிலையில் சஞ்சீவ் கோயங்கா ஒரு கடுமையாக நடந்து கொள்ளும் (toxic boss) முதலாளி என்று கேஎல் ராகுல், ரிஷப் பண்ட்டிடம் கூறுவது போல மீம்ஸ் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் லக்னோ அணியின் ஊரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா எப்படிப்பட்டவர் என்பது குறித்து கேள்வி எழுப்பபட்டது. அதற்கு அந்த அணியின் முன்னாள் கேப்டன் கேஎல் ராகுல் கூறியதாவது:-

பாஸ் அன்பானவர், அக்கறையுள்ளவர் மற்றும் கடினமானவர். மேலும், உங்களுக்கு அன்பு தேவைப்படும்போது அவர் உங்களுக்கு அன்பைத் தருவார். உங்களுக்கு அக்கறை தேவைப்படும்போது உங்களுக்கு அக்கறையைத் தருவார். சில திட்டுகள் தேவைப்படும்போது உங்களையும் திட்டவும் செய்வார் என ராகுல் கூறினார்.

Tags:    

Similar News