கிரிக்கெட் (Cricket)
null

சராசரி 700+.. ஆனால் அணியில் இடம் இல்லை - கருண் நாயர் குறித்து பேசிய அஜித் அகர்கர்

Published On 2025-01-18 18:46 IST   |   Update On 2025-01-19 14:32:00 IST
  • விஜய் ஹசாரே தொடரில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள கருண் நாயர் 752 ரன்கள் குவித்துள்ளார்.
  • அதில் 6 போட்டிகளில் கருண் நாயர் ஆட்டமிழக்கவில்லை. இதனால் அவரின் சராசரி 752 ஆக உள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வீரர்கள் விவரம்:-

1. ரோகித் சர்மா (கேப்டன்), 2. சுப்மன் கில் (துணை கேப்டன்) 3. விராட் கோலி 4. ஷ்ரேயாஸ் ஐயர் 5. கேஎல் ராகுல் 6. ஹர்திக் பாண்ட்யா 7. குல்தீப் யாதவ் 8. அக்சர் படேல் 9. வாஷிங்டன் சுந்தர் 10. பும்ரா (உடற்தகுதியுடன் இருந்தால்) 11. முகமது சமி 12. அர்ஷ்தீப் சிங் 13. ஜடேஜா 14. ரிஷப் பண்ட் 15. ஜெய்ஸ்வால் 16. ஹர்ஷித் ராணா (இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் மட்டும்)

விஜய் ஹசாரே கோப்பை தொடரில் மிக சிறப்பாக விலையை வரும் கருண் நாயர் சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இடம் பெறாதது பேசுபொருளாகியுள்ளது.

இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே கோப்பை தொடரில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள கருண் நாயர் 5 சதங்கள் உட்பட 752 ரன்கள் குவித்துள்ளார். அதில் 6 போட்டிகளில் அவர் ஆட்டமிழக்கவில்லை. இதனால் அவரின் சராசரி 752 ஆக உள்ளது.

இந்நிலையில், கருண் நாயர் தேர்வு செய்யப்படாதது குறித்து பேசிய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர், "கருண் நாயரின் 750 சராசரி என்பது அபரிதமானது. ஆனால் அணியில் 15 பேருக்கு மட்டுமே இடம் என்பதால், அனைவரையும் அணியில் சேர்ப்பது சாத்தியமில்லாதது" என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News