கிரிக்கெட் (Cricket)
சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன்
- கேன் வில்லியம்சன் நியூசிலாந்து அணியின் 3 வடிவிலான கிரிக்கெட்டுக்கும் கேப்டனாக இருந்துள்ளார்.
- 200க்கும் மேற்பட்ட போட்டிகளில் கேப்டனாக இருந்து, 105-107 வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன். இவர் 2016-ம் ஆண்டு நியூசிலாந்து அணியின் 3 வடிவிலான கிரிக்கெட்டுக்கும் கேப்டனாக பொறுப்பேற்றார். மொத்தமாக, அவர் 200க்கும் மேற்பட்ட போட்டிகளில் கேப்டனாக இருந்து, 105-107 வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் அறிவித்துள்ளார். இருப்பினும் டி20 லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதுவரை 93 டி20 போட்டிகளில் ஆடியுள்ள கேன் வில்லியம்சன் 18 அரை சதத்துடன் 2,575 ரன்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.