இந்திய மண்ணில் 17 ஆண்டுகளுக்கு பிறகு 5 விக்கெட்: 2-வது இடதுகை வேகப்பந்து வீச்சாளராக யான்சென் சாதனை
- முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 201 ரன்னில் சுருண்டது.
- தென் ஆப்பிரிக்கா தரப்பில் யான்சென் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது. தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 489 ரன் குவித்தது. செனுரன் முத்துசாமி அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் தனது முதல் டெஸ்ட் செஞ்சூரியை பதிவு செய்தார். முத்துசாமி 109 ரன்னும், மார்கோ யான்சென் 93 ரன்னும் எடுத்தனர். குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், பும்ரா, முகமது சிராஜ், ஜடேஜா தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 201 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 58 ரன்களும் வாஷிங்டன் சுந்தர் 48 ரன்களும் எடுத்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் யான்சென் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன்மூலம் இந்திய மண்ணில் 15 ஆண்டுகளுக்கு பிறகு 5 விக்கெட்டுகள் வீழ்த்திய 2-வது வெளிநாட்டு இடதுகை வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை மார்கோ யான்சென் படைத்துள்ளார். இதற்கு முன்னர் 2010-ம் ஆண்டு மொகாலியில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஜான்சென் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.
மேலும் மொத்தமாக 3-வது இடதுகை வேகப்பந்து வீச்சாளராக யான்சென் உள்ளார். இதற்கு முன்பு 2008, 2009, 2010 ஆகிய ஆண்டுகளில் இந்திய வீரர் ஜாகீர் கான் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.