"The Hundred" தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் இடம் பெறவில்லை என்றால் அவமானம்: ஹாரி ப்ரூக்
- இங்கிலாந்தில் The Hundred தொடர் நடத்தப்படுகிறது.
- இதில் பங்கேற்கும் அணிகளை இந்திய உரிமையாளர்கள் வாங்கியுள்ளனர்.
இங்கிலாந்தில் 100 பந்துகள் (The Hundred) கொண்ட கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. இதில் மன்செஸ்டர் சூப்பர் ஜெயன்ட்ஸ், எம்.ஐ. லண்டன், சதர்ன் பிரேவ், சன்ரைசர்ஸ் லீட்ஸ் ஆகிய அணிகளின் உரிமையாளராக இந்தியாவைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.
இந்தியா- பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் தொடர்பாக மனக்கசப்பு இருப்பதால், The Hundred தொடருக்கான ஏலத்தில் பாகிஸ்தான் வீரர்களை ஏலத்தில் எடுப்பதை தவிர்க்கலாம் என்ற வகையில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
இது தொடர்பாக இங்கிலாந்து டி20 அணி கேப்டன் ஹாரி ப்ரூக் கூறியதாவது:-
எங்களது முழுக் கவனம் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையில் அடுத்த என்ன நடக்கப்போகிறது என்பதை பற்றிதான். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், ஏலம் தொடர்பானது எங்களுடைய வேலை அல்ல.
எனினும், நான் என்ன சொல்கிறேன் என்றால், கடந்த சில வருடங்களாக பாகிஸ்தான் கிரிக்கெட் கிரிக்கெட் நாடாக இருந்து வருகிறது. 50 முதல் 60 வீரர்கள விளையாடுவதற்கான ஏலத்தில் பங்கேற்ற விண்ணப்பிப்பார்கள். அவர்களை The Hundred தொடரில் பார்க்க முடியவில்லை என்றால் அது அவமானம்.
இவ்வாறு ஹாரி ப்ரூக் தெரிவித்துள்ளார்.
ஹாரி ப்ரூக்கை சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. 2008-ம ஆண்டு 26/11 பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் தொடரில் இடம் பெறவில்லை.
2023-ல் இருந்து தென்ஆப்பிரிக்காவில் நடைபெறும் SA20 தொடரிலும் அவர்கள் இடம் பெறவில்லை. இதில் 6 அணிகளின் உரிமையாளர்களும் இந்திய உரிமையாளர்களுடன் தொடர்புடையவர்கள்.