கிரிக்கெட் (Cricket)

அணிக்காக மட்டுமல்ல ரசிகர்களுக்காகவும் அபிஷேக் சர்மா சிறப்பாக ஆடுவார்- இந்திய பந்துவீச்சு பயிற்சியாளர்

Published On 2026-02-21 13:54 IST   |   Update On 2026-02-21 13:54:00 IST
  • சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது.
  • தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் ரசிகர்களை உற்சாகப்படுத்துவார் என்பதால் அந்த ஆட்டத்தை பார்க்க நாங்களும் ஆர்வமாக இருக்கிறோம்.

சென்னை:

10-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது.

இந்திய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா, நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட்டில் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை. உடல்நலக்குறைவால் ஒரு ஆட்டத்தில் ஆடவில்லை. மற்ற 3 ஆட்டங்களி லும் டக்-அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

இந்த நிலையில், அபிஷேக் சர்மாவின் ஃபார்ம் குறித்து இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் கூறியதாவது,

அபிஷேக் சர்மா தொடர்ந்து மூன்று போட்டிகளில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்த போதிலும், அவரை அணியிலிருந்து நீக்குவது குறித்து அணி நிர்வாகத்திற்குள் எந்த விவாதமும் நடைபெறவில்லை.

அபிஷேக் ஒரு உலகத் தரம் வாய்ந்த வீரர். இந்த போட்டி தொடரில் இதுவரை அதிர்ஷ்டவசமாக அணியின் மற்ற வீரர்கள் அதிக ரன் குவித்து வருகிறார்கள். எப்படி இருந்தாலும் அபிஷேக் ஷர்மாவும் ரன்கள் குவிக்க வேண்டியது அவசியமாகும். உலகக் கோப்பையில் முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம் என்பதால் அவர் நன்றாக விளையாட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அணிக்காக மட்டுமல்ல ரசிகர்களுக்காகவும் அவர் சிறப்பாக ஆடுவார் என்பது உறுதி. எப்போதுமே தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் ரசிகர்களை உற்சாகப்படுத்துவார் என்பதால் அந்த ஆட்டத்தை பார்க்க நாங்களும் ஆர்வமாக இருக்கிறோம். அவர் பந்தை நன்றாக அடித்து ஆடுகிறார். அவருக்கு ஒரு நல்ல தொடக்கம் கிடைத்தால் போதும் சிறந்த நிலைக்கு திரும்பி விடுவார்' என்றார்.

Tags:    

Similar News