ஐ.பி.எல்.(IPL)

IPL 2025: ஆக்ரோஷமாக கொண்டாடிய கோலி... கடுப்பான ஷ்ரேயாஸ் - வைரல் வீடியோ

Published On 2025-04-21 06:48 IST   |   Update On 2025-04-21 06:48:00 IST
  • 73 ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்ட கோலிக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
  • வெற்றி பெற்ற பின்பு பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாசை பார்த்து கோலி ஆக்ரோஷமாக கொண்டாடினார்.

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 இன் 37வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்து. இதனையடுத்து 158 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூரு அணி 18.5 ஓவரில் 3 விக்கெட்டை மட்டுமே இழந்து 159 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 73 ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்ட கோலிக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

வெற்றி பெற்ற பின்பு பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாசை பார்த்து கோலி ஆக்ரோஷமாக கொண்டாடினார். இதனை பார்த்து ஷ்ரேயாஷ் கடுப்பானார். பின்பு ஷ்ரேயாசிடம் வந்து கோலி கைகுலுக்க வந்தபோது ஷ்ரேயாஸ் கோவமாக காணப்பட்டார். இதனையடுத்து கோலி சிரித்துக்கொண்டே அவரை சமாதானப்படுத்த முயன்றார். ஆனாலும் ஷ்ரேயாஸ் கடுப்பாகவே காணப்பட்டார்.

கோலியின் ஆக்ரோஷமான இந்த கொண்டாட்டம் இணையத்தில் வைரலாக நெட்டிசன்கள் பலரும் கோலியை விமர்சித்து வருகின்றனர்.  

Tags:    

Similar News