null
ஈ சாலா கப் நம்து!.. ஐபிஎல் வெற்றி பற்றி ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார் உற்சாக பேச்சு
- இந்த வெற்றி எனக்கும், விராட் கோலிக்கும், அனைத்து ரசிகர்களுக்கும் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
- எங்களுக்கு விக்கெட் தேவைப்படும் போதெல்லாம் நான் அவரைத் தேடுகிறேன்.
ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன் வித்தியாசத்தில் வென்று ஆர்சிபி அணி கோப்பையை வென்றுள்ளது. கோப்பை வென்ற ஆர்சிபிக்கு பரிசுத்தொகையாக ரூ.20 கோடி வழங்கப்பட்டது.
இதற்கிடையே வெற்றி குறித்து பேசிய ஆர்சிபி கேட்பன் ரஜத் படிதார், "இந்த வெற்றி எனக்கும், விராட் கோலிக்கும், அனைத்து ரசிகர்களுக்கும் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
தகுதிச் சுற்றுக்குப் பிறகு, நாங்கள் கடந்து செல்ல முடியும் என்று நினைத்தோம். இந்தப் பாதையில் 190 ரன்கள் ஒரு நல்ல ஸ்கோராக இருந்தது.
பந்து வீச்சாளர்கள் தங்கள் திட்டங்களைச் செயல்படுத்துவது பார்ப்பதற்கு மிகவும் சிறப்பாக இருந்தது. குருணால் ஒரு விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர், எங்களுக்கு விக்கெட் தேவைப்படும் போதெல்லாம் நான் அவரைத் தேடுகிறேன்.
சுயாஷ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் சீசன் முழுவதும் சிறப்பாக இருந்தனர். ஷெப்பர்ட் இன்றிரவு முக்கிய விக்கெட்டைக் கொடுத்தார்.
இது எனக்கு ஒரு சிறந்த வாய்ப்பு மற்றும் கோலியிடன் கேப்டனாக கற்றுக்கொள்வதற்கு ஒரு சிறந்த வாய்ப்பு. அவர் வேறு யாரையும் விட அதற்கு தகுதியானவர். அனைத்து ரசிகர்களுக்கும் ஒரு வரியைச் சொல்ல விரும்புகிறேன் - ஈ சாலா கோப்பை நமது," என்று தெரிவித்தார்.