ஐ.பி.எல்.(IPL)
null

சிஎஸ்கே அணியின் பந்து வீச்சை பஞ்சு பஞ்சாய் பறக்க விட்ட பஞ்சாப்- 219 ரன்கள் குவிப்பு

Published On 2025-04-08 21:11 IST   |   Update On 2025-04-08 21:14:00 IST
  • ருத்ர தாண்டவம் ஆடிய ஆர்யா 39 பந்தில் சதம் விளாசி அசத்தினார்.
  • சென்னை அணி தரப்பில் அஸ்வின், கலீல் அகமது தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் களமிறங்கினர். பிரப்சிம்ரன் சிங் 0 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 9, ஸ்டோய்னிஸ் 4, நெகல் வேதேரா 9, மேக்ஸ்வெல் 1 என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் அந்த அணி 83 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது.

ஒரு பக்கம் விக்கெட் விழுந்தாலும் மறுமுனையில் பிரியான்ஷ் ஆர்யா அதிரடியாக அரை சதம் கடந்தார். அந்த சமயத்தில் பிரியான்ஷ் ஆர்யாவுடன் ஷஷாங்க் சிங் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.

ருத்ர தாண்டவம் ஆடிய ஆர்யா 39 பந்தில் சதம் விளாசி அசத்தினார். இதில் 9 சிக்சர் 7 பவுண்டரிகள் அடங்கும். அவர் 42 பந்தில் 103 ரன்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த யான்செனும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இதனால் 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 219 ரன்கள் எடுத்தது. ஷஷாங்க் சிங் 52 ரன்களிலும் யான்சென் 34 ரன்களிலும் களத்தில் இருந்தனர். சென்னை அணி தரப்பில் அஸ்வின், கலீல் அகமது தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Tags:    

Similar News