ஐ.பி.எல்.(IPL)

துலீப் டிராபி: வடக்கு மண்டல அணியின் கேப்டன் சுப்மன் கில் விலகல்?

Published On 2025-08-23 14:30 IST   |   Update On 2025-08-23 14:31:00 IST
  • வடக்கு மண்டல அணியின் கேப்டனாக சுப்மன் கில்லும், துணை கேப்டனாக அங்கித் குமாரும் நியமிக்கப்பட்டனர்.
  • துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) இந்த மாதம் 28-ந் தேதி தொடங்குகிறது.

துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) இந்த மாதம் 28-ந் தேதி முதல் செப்டம்பர் 15-ந் தேதி வரை பெங்களூருவில் நடக்கிறது. இந்த போட்டியில் வடக்கு, கிழக்கு, மத்திய, வடகிழக்கு மண்டலங்கள் காலிறுதியில் மோதுகின்றன. தெற்கு மற்றும் மேற்கு மண்டல அணிகள் நேரடியாக அரையிறுதியில் விளையாட உள்ளன.

இந்நிலையில் இந்த தொடருக்கான வடக்கு மண்டல அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சுப்மன் கில் கேப்டனாகவும், அங்கித் குமார் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இந்த தொடரில் இருந்து கேப்டன் சுப்மன் கில் விலகுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அங்கித் குமார் தலைமையில் வடக்கு மண்டல அணி விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், வரவிருக்கும் ஆசியக் கோப்பைக்கு அவர் விளையாடுவாரா இல்லையா என்பது குறித்து எந்தக் கவலையும் இல்லை.

Tags:    

Similar News