ஐ.பி.எல்.(IPL)
ஆர்சிபி அணிக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சு தேர்வு
- ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இவ்விரு அணிகள் இதுவரை 33 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன.
- இதில் 19-ல் மும்பையும், 14-ல் பெங்களூருவும் வெற்றி பெற்றுள்ளன.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய 20-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகிறது. இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
பெங்களூரு அணி மும்பையை அதன் சொந்த ஊரில் வீழ்த்தி 10 ஆண்டுகள் ஆகி விட்டது. இந்த மைதானத்தில் மும்பைக்கு எதிராக 11 ஆட்டங்களில் ஆடியிருக்கும் பெங்களூரு அணி அதில் 3-ல் வெற்றியும், 8-ல் தோல்வியும் சந்தித்துள்ளது. அதனால் அந்த நீண்ட கால சோகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வரிந்து கட்டி நிற்பார்கள்.
மொத்தத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இவ்விரு அணிகள் இதுவரை 33 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 19-ல் மும்பையும், 14-ல் பெங்களூருவும் வெற்றி பெற்றுள்ளன.