ஐ.பி.எல்.(IPL)

ஐபிஎல் 2025: குஜராத்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது லக்னோ

Published On 2025-05-22 23:42 IST   |   Update On 2025-05-22 23:42:00 IST
  • டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
  • முதலில் பேட் செய்த லக்னோ அணி 20 ஓவரில் 235 ரன்கள் குவித்தது.

அகமதாபாத்:

ஐ.பி.எல். தொடரின் 64-வது லீக் போட்டி குஜராத்தின் அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் குவித்தது.

முதல் விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்த நிலையில் மார்கிராம் 37 ரன்னில் அவுட்டானார். அதிரடியாக ஆடிய மிட்செல் மார்ஷ் சதமடித்து அசத்தினார்.

2வது விக்கெட்டுக்கு இணைந்த மிட்செல் மார்ஷ்- நிகோலஸ் பூரன் ஜோடி 221 ரன்கள் சேர்த்த நிலையில் மார்ஷ் 117 ரன்னில் ஆட்டமிழந்தார். நிகோலஸ் பூரன் 23 பந்தில் அரைசதம் விளாசினார்.

இதையடுத்து, 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சன் 21 ரன்னிலும், சுப்மன் கில் 35 ரன்னிலும், ஜாஸ் பட்லர் 33 ரன்னிலும் அவுட்டாகினர்.

4வது விக்கெட்டுக்கு இணைந்த ரதர்போர்டு-ஷாருக் கான் ஜோடி அதிரடியாக ஆடியது. இந்த ஜோடி 86 ரன்கள் சேர்த்த நிலையில் ரதர்போர்டு 38 ரன்னில் ஆட்டமிழந்தார். ஷாருக் கான் 22 பந்தில் அரை சதம் அடித்தார். அவர் 57 ரன்னில் வெளியேறினார்.

இறுதியில், குஜராத் டைட்டன்ஸ் அணி 9 விக்கெட்டுக்கு 202 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 33 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி ஆறுதல் வெற்றி பெற்றது.

லக்னோ அணி சார்பில் ரூர்கி 3 விக்கெட்டும், ஆவேஷ் கான், ஆயுஷ் பதோனி தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.

Tags:    

Similar News