ஐ.பி.எல்.(IPL)
சின்னசாமி மைதானத்தின் முன்பு குவிந்த ரசிகர்கள்: லேசான தடியடி நடத்திய போலீசார்
- சின்னசாமி மைதானத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடினர்.
- கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர்.
ஐபிஎல் 2025 சீசனில் ஆர்சிபி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு) அணி கோப்பையை வென்றது. 18 வருடம் கழித்து தற்போது ஆர்சிபி அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளதை, அந்த அணியின் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். ஆர்சிபி அணிக்கு கர்நாடக மாநில அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழா விதான சவுதாவில் நடைபெற்றது.
பின்னர் வீரர்கள் சின்னசாமி மைதானத்தில் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். ஒரே நேரத்தில் நுழைவாயில் வழியாக உள்ளே செல்ல முயன்றதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர்
இந்த நிலையில் கூட்ட நெரிசலை சமாளிக்க போலீசார லேசான தடியடி நடத்தினர்.