ஐ.பி.எல்.(IPL)

16 ஆண்டுகால சிஎஸ்கே அணியின் சாதனையை முறியடித்த பஞ்சாப்

Published On 2025-04-16 11:29 IST   |   Update On 2025-04-16 11:29:00 IST
  • ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் கொல்கத்தா- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது.
  • இந்த போட்டியில் பஞ்சாப் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் 112 ரன் இலக்கை கூட தொட முடியாமல் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணி 95 ரன்னில் சுருண்டு படுதோல்வி அடைந்தது.

இதன்மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் இதுதான் ஒரு அணிக்கு குறைந்த ஸ்கோரை இலக்காக வைத்து கிடைத்த வெற்றியாகும்.

 

இதற்கு முன்பு சென்னை அணி 2009-ம் ஆண்டில் பஞ்சாப்புக்கு எதிராக 117 ரன்னை இலக்காக நிர்ணயித்து அதில் 24 ரன் வித்தியாசத்தில் வென்றதே, குறைந்த இலக்கில் கிடைத்த வெற்றியாகும். அந்த 16 ஆண்டுகால சாதனையை பஞ்சாப் முறியடித்தது.

Tags:    

Similar News