ஐ.பி.எல்.(IPL)

வெற்றி பெற்றாலும் அடக்கமாக இருப்போம்- ஹர்திக் பாண்ட்யா

Published On 2025-05-02 12:26 IST   |   Update On 2025-05-02 12:26:00 IST
  • நாங்கள் எளிய கிரிக்கெட்டுக்குத் திரும்புகிறோம்.
  • எங்கள் பவுலரின் படை அனுபவம் வாய்ந்ததாக இருக்கின்றது.

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ராஜஸ்தானை 100 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வீழ்த்தியது. இதன் மூலம் நடப்பு தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து ஆறாவது வெற்றியை பெற்று அசத்தி இருக்கிறது.

இதன் மூலம் புள்ளி பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் இடத்தை பிடித்திருக்கிறது. மும்பை அணி 11 போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றியும் நான்கு போட்டிகளில் தோல்வியும் என 14 புள்ளிகளை பெற்றிருக்கிறது.

இந்நிலையில் இந்த வெற்றியால் நாங்கள் துள்ளி குதிக்க மாட்டோம் என்றும் அடக்கமாக நடந்து கொள்வோம் என்றும் ஹர்திக் பாண்ட்யா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

நாங்கள் இன்று பேட்டிங் செய்த விதம் மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. அதுமட்டுமல்லாமல் பந்துவீச்சில் என்று சிறப்பாக செயல்பட்டு இருக்கின்றோம். பேட்டிங்கில் கூடுதலாக ஒரு 15 ரன்கள் அடித்திருக்கலாம். ஆனால் அதை மட்டும் தவற விட்டு இருக்கின்றோம்.

எங்கள் பவுலரின் படை அனுபவம் வாய்ந்ததாக இருக்கின்றது. எனக்கு எந்த பவுலர்கள் பெயரை விடுவது, சொல்வது என்றே தெரியவில்லை. எனவே அவர்களை குறித்து எனக்கு எந்த கவலையும் இல்லை நாங்கள் தெளிவான மனநிலையில் இருக்கின்றோம்.

நாங்கள் எளிய கிரிக்கெட்டுக்குத் திரும்புகிறோம். அதுதான் எங்களுக்கு கை கொடுக்கின்றது. இந்த வெற்றி தொடரும் என்று நம்புகிறோம். இவ்வளவு வெற்றி பெற்றாலும், நாங்கள் அடக்கமான முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றேன். நாங்கள் இதே போல் முழு கவனத்துடன் செயல்படுவோம்.

என்று ஹர்திக் கூறியுள்ளார்.

Tags:    

Similar News