ஐ.பி.எல்.(IPL)

ஐபிஎல் 2025: சிஎஸ்கே-வுக்கு சிக்சர் இல்லாத பவர்பிளே..!

Published On 2025-04-11 20:24 IST   |   Update On 2025-04-11 20:24:00 IST
  • இந்த சீசனில் சிஎஸ்கே பவர்பிளேயில் 2ஆவது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளது.
  • கான்வே, ரச்சின் ரவிந்திரா அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அடைந்தனர்.

ஐபிஎல் 2025 சீசனின் 25ஆவது ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் ரகானே பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி ரச்சின் ரவீந்திரா, டேவன் கான்வே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரில் ஒரு பவுண்டரியுடன் 6 ரன்கள் கிடைத்தது. 2ஆவது ஓவரில் 4 ரன்களே கிடைத்தது. அடுத்த ஓவரில் 6 ரன்கள் கிடைத்தது. இதனால் 4 ஓவரில் 2 பவுண்டரியுடன் 16 ரன்கள் எடுத்தது.

4ஆவது ஓவரை மொயீன் அலி வீசினார். இந்த ஓவரில் சிஎஸ்கே-வுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. முதல் பந்தில் கான்வே ஆட்டமிழந்தார். அவர் 12 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார். இந்த ஓவரில் ரன்ஏதும் கிடைக்கவில்லை.

5ஆவது ஓவரை ஹர்ஷித் ராணா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் ரச்சின் ரவீந்திரா ஆட்டமிழந்தார். இவர் 4 ரன்னில் வெளியேறினார். அடுத்து விஜய் ஷங்கர் களம் இறங்கினார். 3ஆவது பந்தில் விஜய் ஷங்கர் கொடுத்த எளிதான கேட்சை சுனில் நரைன் பிடிக்க தவறினார். இதனால் விஜய் ஷங்கர் டக்அவுட்டில் இருந்து தப்பினார். இந்த ஓவரில் 2 ரன்கள் மட்டுமே கிடைத்தது.

பவர்பிளேயில் கடைசி ஓவரான 6ஆவது ஓவரை வருண் சக்ரவர்த்தி வீசினார். இந்த ஓவரில் விஜய் சங்கர் 2 பவுண்டரி அடித்தார். இதனால் 13 ரன்கள் கிடைத்தது. அத்துடன் சென்னை சூப்பர் கிங்ஸ் பவர்பிளேயில் 2 விக்கெட்டுகளை இழந்து 31 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த சீசனில் பவர்பிளேயில் 2ஆவது குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும்.

மேலும், சிஎஸ்கே பளர்பிளேயில் ஒரு சிக்ஸ் கூட அடிக்கவில்லை. இதனால் சிக்சர் இல்லாத பவர்பிளேயாக அமைந்தது.

Tags:    

Similar News