ஐ.பி.எல்.(IPL)
பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் மும்பை இந்தியன்ஸ் வீரர் கைது
- சிவாலிக் சர்மா, 2023 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
- ராஜஸ்தான் போலீசார் சிவாலிக் சர்மாவை கைது செய்தனர்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சிவாலிக் சர்மா பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தன்னை திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி கொடுத்து தன்னுடன் உடல்ரீதியான உறவில் ஈடுபட்ட சிவாலிக் சர்மா, தற்போது திருமணம் செய்துகொள்ள மறுப்பதாக அவரது காதலி புகார் கொடுத்திருந்தார்.
சிவாலிக் சர்மாவின் காதலி கொடுத்த புகாரின் பேரில் ராஜஸ்தான் போலீசார் அவரை கைது செய்தனர். தற்போது நீதிமன்ற காவலில் அவர் அடைக்கப்பட்டார்.
26 வயதான சிவாலிக் சர்மா, 2023 ஆம் ஐபிஎல் தொடருக்காக மும்பை இந்தியன்ஸ் அணியால் 20 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். ஆனால் ஒரு போட்டியில் கூட அவர் விளையாடவில்லை. கடந்த நவம்பரில் நடந்த ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்னதாக மும்பை அணி அவரை விடுவித்தது குறிப்பிடத்தக்கது.