வீடியோ: வாட்டர் பாய்.. இளம் வீரரை ஸ்லெட்ஜிங் செய்த விராட்: வலுக்கும் கண்டனம்
- குபாலிபையர் 1 சுற்றில் பஞ்சாப்- பெங்களூரு அணிகள் நேற்று மோதின.
- இந்த போட்டியில் பஞ்சாப் அணியில் முதல் முறையாக முஷீர்கான் களமிறங்கினார்.
முல்லான்பூர்
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் மாநிலம் முல்லான்பூரில் நேற்று இரவு நடந்த குவாலிபையர் 1 சுற்றில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த பஞ்சாப் கிங்ஸ், 2-வது இடம் பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொண்டது. இதில் ஆர்சிபி அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணியில் 20-வயதான முஷீர் கான் அறிமுக வீரராக களமிறங்கினார். இருப்பினும் 3 பந்துகளை எதிர்கொண்ட அவர் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
அவர் பேட்டிங் செய்ய வந்தபோது ஸ்லீப் பகுதியில் பீல்டிங் நின்ற விராட் கோலி, சைகை மூலம் சக வீரரிடம் 'வாட்டர் பாய்' என்று கூறுவார். இதனை கண்ட ரசிகர்கள் பலர் இப்படி ஒரு ஜாம்பவான் வீரர் அறிமுக வீரரை ஸ்லெட்ஜிங் செய்வது மிகவும் தவறானது என்று விராட் கோலியை விமர்சித்து வருகின்றனர்.
இந்த போட்டியில் முஷீர் கான் பேட்டிங் செய்ய களமிறங்குவதற்கு சில ஓவர்களுக்கு முன் பெவிலியனில் இருந்து களத்தில் இருந்த சக வீரர்களுக்கு தண்ணீர் கொண்டு வந்தார். இதனை குறிப்பிட்டு விராட் கோலி கிண்டலடித்ததாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.