ஐ.பி.எல்.(IPL)
IPL 2025: ஆர்.சி.பி அணியில் இருந்து காயம் காரணமாக படிக்கல் விலகல் - மாற்றுவீரர் அறிவிப்பு
- ஆர்சிபி அணி புள்ளிப்பட்டியலில் 2 ஆம் இடத்தில் உள்ளது.
- இந்த ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணிக்காக 10 போட்டிகளில் விளையாடிய படிக்கல் 247 ரன்கள் எடுத்திருந்தார்
நடப்பு ஐபிஎல் தொடரில் எழுச்சி பெற்றுள்ள ஆர்சிபி அணி புள்ளிப்பட்டியலில் 2 ஆம் இடத்துக்கு முன்னேறி அசத்தியுள்ளது. எளிதாக பிளேஆப் சுற்றுக்கு பெங்களூரு அணி தகுதி பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து ஆர்சிபி அணி வீரர் படிக்கல் விலகியுள்ளார். படிக்கலுக்கு பதிலாக மயங்க் அகர்வாலை ஆர்சிபி அணி எடுத்துள்ளது.
இந்த ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணிக்காக 10 போட்டிகளில் விளையாடியுள்ள படிக்கல் 247 ரன்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.