ஐ.பி.எல்.(IPL)

IPL 2025: எந்த ஒரு அணியாலும் 300 ரன்களை குவிக்க இயலும் - ரிங்கு சிங்

Published On 2025-04-27 10:42 IST   |   Update On 2025-04-27 10:42:00 IST
  • கடந்த சீசனில் ஐதராபாத் அந்த அணி 250 ரன்களுக்கும் அதிகமாக 3 முறை குவித்தது.
  • இந்த சீசனில் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி 286 ரன்கள் குவித்தது.

கடந்த ஐ.பி.எல். போட்டி யில் 200 ரன்களுக்கும் அதிகமாக ரன் குவிப்பதை அடிக்கடி பார்க்க முடிந்தது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் கடந்த சீசனில் மிகவும் எளிதாக 250 ரன்களுக்கும் அதிகமாக பலமுறை குவித்தது.

ஐ.பி.எல். தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 300 ரன்களை முதலில் குவிக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

இந்நிலையில் ஐ.பி.எல். தொடரில் எந்த ஒரு அணியாலும் 300 ரன்கள் குவிக்க முடியும் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் ரிங்கு சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ஜியோ ஹாட்ஸ்டாரில் கூறியதாவது:-

எங்களால் 300 ரன்கள் குவிக்க முடியும். 300 ரன்களை தொடுவது முக்கியம் எனும் நிலையை இந்த தொடர் எட்டியுள்ளது. கடந்த ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் 262 ரன்கள் என்ற இலக்கை வெற்றிகரமாக சேஸ் செய்தது. தற்போது இந்த தொடரில் அனைத்து அணிகளும் வலுவாக உள்ளன. எந்த ஒரு அணியாலும் 300 ரன்கள் குவிக்க முடியும்.

இவ்வாறு ரிங்கு சிங் கூறினார்.

கடந்த சீசனில் ஐதராபாத் அந்த அணி 250 ரன்களுக்கும் அதிகமாக 3 முறை குவித்தது. இந்த சீசனில் அந்த அணி ராஜஸ்தான் ராயல்சுக்கு எதிரான முதல் போட்டியிலேயே 286 ரன்கள் குவித்தது.

ரன் குவிப்புக்கு இம்பேக்ட் பிளேயர் விதியும் (தாக்கத்தை ஏற்படுத்துதல்) முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.

Tags:    

Similar News