மகளிர் உலகக் கோப்பை: நியூசிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா
- டாஸ் வென்ற நியூசிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.
- அதன்படி, முதலில் ஆடிய இந்தியா 340 ரன்கள் குவித்தது.
மும்பை:
13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
நவி மும்பையில் இன்று நடைபெற்ற 24-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி 49 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 340 ரன்கள் குவித்தது. தொடக்க வீராங்கனைகளான பிரதிகா ராவல், ஸ்மிருதி மந்தனா ஆகியோர் சதமடித்து அசத்தினர். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 76 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து, 341 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. மழை காரணமாக 44 ஓவரில் 325 ரன்கள் இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.
அந்த அணியின் புருக் ஹாலிடே தனியாளாகப் போராடி 81 ரன்கள் எடுத்து அவுட்டானார். மற்றொரு வீராங்கனை இசபெல்லா கடைசி வரை போராடி 65 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், நியூசிலாந்து 45 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 271 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 53 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்று, அரையிறுதிக்குள் நுழைந்தது.