கிரிக்கெட் (Cricket)
null

INDvsSA: 5 முக்கிய விக்கெட்டுகளை இழந்து இந்தியா திணறல்

Published On 2025-11-24 11:34 IST   |   Update On 2025-11-24 11:35:00 IST
  • இந்தியா தரப்பில் ஜெய்ஸ்வால் அரைசதம் கடந்தார்.
  • தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஹார்மர், யான்சென் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

கவுகாத்தி:

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது.

தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 489 ரன் குவித்தது. செனுரன் முத்துசாமி அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் தனது முதல் டெஸ்ட் செஞ்சூரியை பதிவு செய்தார். முத்துசாமி 109 ரன்னும், மார்கோ யான்சென் 93 ரன்னும் எடுத்தனர். குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், பும்ரா, முகமது சிராஜ், ஜடேஜா தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 9 ரன் எடுத்து இருந்தது. ஜெய்ஸ்வால் 7 ரன்னுடனும், கே.எல்ராகுல் 2 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இன்று 3-வது நாள் ஆட்டம் காலை 9 மணிக்கு தொடங்கியது. 480 ரன்கள் பின்தங்கி, கைவசம் 10 விக்கெட் என்ற நிலையில் இந்தியா தொடர்ந்து விளையாடியது.

இருவரும் நிதானமாக ஆடினார்கள். 18.5 ஓவரில் 50 ரன்னை தொட்டது. அப்போது ஜெய்ஸ்வால் 36 ரன்னும், ராகுல் 13 ரன்னும் எடுத்து இருந்தனர்.

அதற்கு அடுத்த சில நிமிடங்களில் ராகுல் ஆட்டம் இழந்தார். அவர் 22 ரன்னில் கேசவ் மகராஜ் பந்தில் பெவிலியன் திரும்பினார்.

அப்போது ஸ்கோர் 65 ஆக இருந்தது. 2-வது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வாலுடன், சாய்சுதர்சன் ஜோடி சேர்ந்தார்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 58 ரன்கள் எடுத்த போது ஆட்டமிழந்தார். அடுத்த சிறிது நேரத்தில் சாய் சுதர்சன் அதிரடியாக ஆட முயற்சித்து 15 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஜூரல் 11 பந்துகளை சந்தித்து டக் அவுட் ஆனார்.

இதனால் 3-வது நாள் தேநீர் இடைவேளை வரை இந்தியா 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து 102 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறியது. இடைவேளை முடிந்து முதல் ஓவரில் அதிரடியாக விளையாட முயற்சித்து ரிஷப் பண்ட் ஆட்டமிழந்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஹார்மர், யான்சென் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Tags:    

Similar News