கிரிக்கெட் (Cricket)
இந்தியா VS இங்கிலாந்து டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டம் மழையால் தாமதம்
- முதல் இன்னிங்சில் இந்தியா 587 ரன்கள் குவித்தது.
- முதல் இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து 407 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 587 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து 407 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
180 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்சை ஆடிய இந்தியா 427 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன்மூலம் இங்கிலாந்துக்கு 608 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்துள்ளது.
இந்நிலையில், எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் மழை வெளுத்து வாங்கி வருவதால், இந்தியா VS இங்கிலாந்து டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மழை நின்றதும் மீண்டும் போட்டி விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.