கிரிக்கெட் (Cricket)

டி20 உலகக் கோப்பைக்கான டிக்கெட் விற்பனை தொடக்கம்: குறைந்தபட்ச விலை ரூ.100

Published On 2025-12-12 05:07 IST   |   Update On 2025-12-12 05:07:00 IST
  • டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதி தொடங்குகிறது.
  • 20 நாடுகள் பங்கேற்கும் இந்த தொடர் இந்தியா, இலங்கையில் நடைபெறுகிறது.

துபாய்:

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதி முதல் மார்ச் 8-ம் தேதி வரை இந்தியா, இலங்கையில் நடைபெறுகிறது. இதில் 20 நாடுகள் பங்கேற்கின்றன.

போட்டியை நடத்தும் இந்தியா, இலங்கை மற்றும் கடந்த உலகக் கோப்பையில் முதல் 7 இடங்களைப் பிடித்த அணிகள், டி20 தர வரிசையில் உள்ள 3 நாடுகள் ஆகிய 12 அணிகள் நேரடியாக இடம் பெற்றன. மீதியுள்ள 8 நாடுகள் தகுதிச்சுற்று மூலம் தேர்வானது. இவை 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு பிரிவிலும் 5 நாடுகள் இடம் பெற்றுள்ளன. லீக் சுற்றுகள் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும். அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும். இந்த சுற்றில் ஆடும் 8 நாடுகளும் 2 பிரிவாக பிரிக்கப்படும். இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.

40 லீக் ஆட்டம், சூப்பர் 8 சுற்றில் 12 போட்டி உள்பட மொத்தம் 55 ஆட்டங்கள் நடக்கிறது.

இந்தியாவில் அகமதாபாத், கொல்கத்தா, மும்பை, சென்னை, புதுடெல்லி ஆகிய இடங்களிலும், இலங்கையில் கொழும்பு, கண்டியிலும் போட்டி நடைபெறுகிறது.

இந்நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான டிக்கெட் விற்பனை tickets.cricketworldcup.com தளத்தில் நேற்று மாலை 6.15க்கு தொடங்கியது.

குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.100 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரூ.150, ரூ.250, ரூ.300, ரூ.500, ரூ.600, ரூ.750 ஆகிய விலைகளிலும் விற்கப்படுகிறது.

இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்திற்கான டிக்கெட்டின் தொடக்க விலை ரூ.750 ஆகும்.

விற்பனை தொடங்கிய உடனே ஏராளமான ரசிகர்கள் இந்த இணைய தளத்தை அணுகியதால் சிறிது நேரம் இணைய தளமே முடங்கியது.

Tags:    

Similar News