வெஸ்ட் இண்டீஸ் 128 ரன்னில் சுருண்டது: 2-வது டெஸ்டில் நியூசிலாந்து வெற்றி
- இரு அணிகள் மோதிய முதல் டெஸ்ட் டிரா ஆனது.
- 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
வெலிங்டன்:
நியூசிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நடைபெற்றது.வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 205 ரன்னும், நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 278 ரன்னும் எடுத்தன. நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 2-வது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்பிற்கு 32 ரன் எடுத்து இருந்தது.
இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 128 ரன்னில் சுருண்டது. ஜேக்கப் டபி 5 விக்கெட் வீழ்த்தினார். 56 ரன் இலக்குடன் ஆடிய நியூசிலாந்து 1 விக்கெட் இழப்புக்கு 57 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரு அணிகள் மோதிய முதல் டெஸ்ட் டிரா ஆனது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் 18-ந் தேதி தொடங்குகிறது.