கிரிக்கெட் (Cricket)

3வது டி20 போட்டி: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக வெற்றி பெறும் முனைப்பில் இந்தியா

Published On 2025-12-14 04:06 IST   |   Update On 2025-12-14 04:06:00 IST
  • இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
  • இரு போட்டிகளின் முடிவில் டி20 தொடர் 1-1 என சமனில் உள்ளது.

தர்மசாலா:

இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்தியாவும், 2வது போட்டியில் தென் ஆப்பிரிக்காவும் வென்றன. இதனால் டி20 தொடர் 1-1 என சமனில் உள்ளது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி தர்மசாலாவில் இன்று நடைபெற உள்ளது.

கேப்டன் சூர்யகுமார் கடந்த 17 சர்வதேச டி20 போட்டியில் 201 ரன்கள் எடுத்துள்ளார். கேப்டன் என்பதால் நீக்க முடியாது. மீண்டும் 3வது இடத்தில் களமிறங்கி விளாச வேண்டும்.

துணை கேப்டன் சுப்மன் கில் இடம் தான் கேள்விக்குறியாக உள்ளது. கடந்த 14 போட்டியில் 263 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

சஞ்சு சாம்சனை பின்வரிசைக்கு அனுப்பிவிட்டு, தொடக்க வீரர் வாய்ப்பை சுப்மன் கில்லுக்கு கொடுத்தனர். தற்போது இவரும் சோபிக்கவில்லை.

அபிஷேக் சர்மா அவசரப்படக் கூடாது. கடந்த போட்டியில் அரைசதம் விளாசிய திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா நல்ல பார்மில் இருப்பது பலம். கடைசி கட்டத்தில் ஷிவம் துபே கைகொடுக்க வேண்டும்.

வேகப்பந்து வீச்சில் பும்ரா தடுமாறுகிறார். அர்ஷ்தீப் சிங்குக்கு பதிலாக பாண்ட்யாவை பயன்படுத்தலாம். குல்தீப் யாதவை சேர்க்கலாம்.

தென் ஆப்பிரிக்க அணியில் கேப்டன் மார்க்ரம், குயின்டன் டி காக், பிரேவிஸ், பெரேரா, மில்லர், யான்சென் என அதிரடி பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

நோர்ஜியா, யான்சென், லுங்கி நிகிடி, பார்ட்மென், சிபாம்லா போன்ற வேகங்களுக்கு சாதகம். சுழலில் கைகொடுக்க மகராஜ் உள்ளார்.

இரு அணிகளும் வெல்ல போட்டி போடும் என்பதால் ஆட்டம் சுவாரஸ்யமாக இருக்கும் என ரசிகர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News