கிரிக்கெட் (Cricket)

முதல் ஒருநாள் போட்டி: இந்தியா-நியூசிலாந்து இன்று மோதல்

Published On 2026-01-11 03:58 IST   |   Update On 2026-01-11 03:58:00 IST
  • முதல் ஒரு நாள் போட்டி வதோதராவில் நடைபெற உள்ளது.
  • 2வது போட்டி ராஜ்கோட்டிலும், 3வது போட்டி இந்தூரிலும் நடக்கிறது.

அகமதாபாத்:

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.

இந்நிலையில், இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி வதோதராவில் இன்று நடைபெற உள்ளது. தொடர்ந்து ராஜ்கோட் (ஜனவரி 14), இந்தூர் (ஜனவரி 18) ஆகிய இடங்களில் நடக்கிறது.

இந்நிலையில், இந்த தொடருக்காக இரு அணி வீரர்களும் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டனர். முதல் ஒருநாள் போட்டி இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

இரு அணிகளும் தொடரை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் களம் இறங்குகின்றன. இந்திய நட்சத்திர கூட்டணியான ரோ-கோ மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஒருநாள் போட்டிகளில் இதுவரை இந்தியா, நியூசிலாந்து அணிகள் 120 போட்டிகளில் நேருக்கு நேர் மோதின. இதில் 62ல் இந்தியாவும், 50ல் நியூசிலாந்தும் வென்றுள்ளன. ஒரு போட்டி சமனில் முடிந்தது. 7 போட்டி கைவிடப்பட்டது.

இந்திய அணி:

சுப்மன் கில் (கேப்டன்), ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல் , ஷ்ரேயாஸ் ஐயர் , வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ், ரிஷப் பண்ட், அர்ஷ்தீப் சிங் , நிதிஷ்குமார் ரெட்டி, ஜெய்ஸ்வால்.

நியூசிலாந்து அணி:

மைக்கேல் பிரேஸ்வெல் (கேப்டன்), ஆதி அசோக், கிறிஸ்டியன் கிளார்க், ஜோஷ் கிளார்க்சன், டெவன் கான்வே, ஜாக் போல்க்ஸ், மிட்ச் ஹே, கைல் ஜேமிசன், நிக் கெல்லி, ஜெய்டன் லெனாக்ஸ், டேரில் மிட்செல், ஹென்றி நிக்கோல்ஸ், கிளென் பிலிப்ஸ், மைக்கேல் ரே, வில் யங்.

Tags:    

Similar News