கிரிக்கெட் (Cricket)
null

அந்த 3 பேரில் ஒருவரை நீக்குங்கள்- தடுமாறும் இந்திய அணிக்கு ரகானே அட்வைஸ்

Published On 2025-07-18 21:31 IST   |   Update On 2025-07-18 21:56:00 IST
  • கவுதம் கம்பீருக்கு ஆல்ரவுண்டர்கள் மீது அதிக பாசம் இருப்பதை மதிக்கிறேன்.
  • வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா மற்றும் நிதீஷ்குமார் ரெட்டி என மூன்று ஆல் ரவுண்டர்கள் இங்கு தேவையில்லை.

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது 193 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்கினை துரத்திய இந்திய அணியானது இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 170 ரன்களுக்கு சுருண்டது. இதன் காரணமாக இங்கிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவுசெய்தது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது.

இந்நிலையில் வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா மற்றும் நிதீஷ்குமார் ரெட்டி என மூன்று ஆல் ரவுண்டர்கள் இங்கு தேவையில்லை என கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில்:-

இங்கிலாந்து மண்ணில் நான்காவது மற்றும் ஐந்தாவது நாட்களில் பேட்டிங் செய்வது மிகவும் கடினம் என்பது அனைவருக்குமே தெரிந்த ஒரு வெளிப்படையான ரகசியம் தான். லார்ட்ஸ் மைதானத்திலும் இந்திய அணி தடுமாற அதுவே காரணம். அதேவேளையில் இங்கிலாந்து அணியின் வீரர்களும் சிறப்பாக பந்துவீசி இருந்தனர். அதேபோன்று இந்திய அணி செய்யும் மிகப்பெரிய தவறு யாதெனில் இங்கிலாந்து மைதானங்களில் முறையான பவுலர்களுடன் விளையாட வேண்டும்.

கவுதம் கம்பீருக்கு ஆல்ரவுண்டர்கள் மீது அதிக பாசம் இருப்பதை மதிக்கிறேன். ஆனால் வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா மற்றும் நிதீஷ்குமார் ரெட்டி என மூன்று ஆல் ரவுண்டர்கள் இங்கு தேவையில்லை. இவர்களில் யாரையாவது ஒருவரை நீக்கிவிட்டு குல்தீப் யாதவை சேர்க்க அவர் நிச்சயம் ஆலோசித்தாக வேண்டும். ஏனெனில் இங்கிலாந்து மண்ணில் குல்தீப் யாதவின் தேவை அதிகமாக இருப்பதாக நான் கருதுகிறேன்.

என ரகானே கூறினார்.

Tags:    

Similar News