கிரிக்கெட் (Cricket)
இந்தியா- நியூசிலாந்து தொடர்: போட்டிக்கான இடங்கள் அறிவிப்பு
- நியூசிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
- பரோடா, ராஜ்கோட், இந்தூர், ஆகிய இடங்களில் ஒருநாள் போட்டிகள் நடைபெறுகிறது.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் ஐந்து 20 ஓவர் ஆட்டங்களில் விளையாடுகிறது. 20 ஓவர் உலக கோப்பைக்கு முன்பு இந்த தொடர் நடைபெற்றது. ஜனவரி 11-ந்தேதி இந்த போட்டி தொடர் தொடருகிறது.
இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து மோதும் போட்டிகளுக்கான இடங்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (ஐ.சி.சி) அறிவித்துள்ளது. பரோடா, ராஜ்கோட், இந்தூர், ஆகிய இடங்களில் ஒருநாள் போட்டிகளும், நாக்பூர், ராய்ப்பூர் கவுகாத்தி, விசாகப்பட்டினம், திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் 20 ஓவர் ஆட்டங்களும் நடைபெறும்.