கிரிக்கெட் (Cricket)

2012-க்கு பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் டி20 தொடரை இழக்காத இந்தியா

Published On 2025-10-29 12:16 IST   |   Update On 2025-10-29 12:16:00 IST
  • சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 32 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன.
  • ஆஸ்திரேலிய மண்ணில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் இதுவரை டி20 தொடரை இந்திய அணி இழந்தது இல்லை.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது.

இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய மண்ணில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் இதுவரை டி20 தொடரை இந்திய அணி இழந்தது இல்லை.

அந்த வகையில் 2012 - டிரா 1-1, 2016 - இந்தியா வெற்றி 3-1, 2018 - டிரா 1-1, 2020-ல் இந்தியா வெற்றி 2-1 என வரலாறு உள்ளது. இந்த வரலாறு தொடருமா என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 32 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 20-ல் இந்தியாவும், 11-ல் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.

கான்பெர்ராவில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவும். லேசாக மழை பெய்வதற்கு கூட வாய்ப்புள்ளது என அங்குள்ள வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மைதானத்தில் இதுவரை நடந்துள்ள ஐந்து சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் 178 ரன்களே அதிகபட்ச ஸ்கோராகும். பவுண்டரி தூரம் அதிகம் என்பதால் சுழற்பந்து வீச்சு முக்கிய பங்கு வகிக்கும்.

Tags:    

Similar News