கிரிக்கெட் (Cricket)

கே.எல்.ராகுல், அபிமன்யு ஈஸ்வரன் அரைசதம்: 2வது இன்னிங்சில் இந்தியா ஏ அணி முன்னிலை

Published On 2025-06-09 02:37 IST   |   Update On 2025-06-09 02:37:00 IST
  • இந்திய ஏ அணி முதல் இன்னிங்சில் 348 ரன்களில் ஆல் அவுட்டானது.
  • இங்கிலாந்து லயன்ஸ் அணி முதல் இன்னிங்சில் 327 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

நார்த்தம்டான்:

இந்தியா ஏ, இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நார்த்தம்டானில் நடந்து வருகிறது.

முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 89.3 ஓவரில் 348 ரன்களில் ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 116 ரன்கள் அடித்தார்.

இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டும், ஜோஷ் டாங், ஜார்ஜ் ஹில் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து லயன்ஸ் அணி முதல் இன்னிங்சில் 327 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக எமிலோ ஹே 71 ரன் எடுத்தார்.

இந்தியா ஏ சார்பில் கலீல் அகமது 4 விக்கெட்டும், துஷார் தேஷ்பாண்டே, கம்போஜ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து 21 ரன் முன்னிலையுடன் இந்திய அணி 2வது இன்னிங்சை ஆடியது. கே.எல்.ராகுல் அரை சதமடித்து 51 ரன்னில் அவுட்டானார். கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் பொறுப்புடன் ஆடி 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

மூன்றாம் நாள் முடிவில் இந்திய ஏ அணி 4 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் இந்திய ஏ அணி 184 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

Tags:    

Similar News