கிரிக்கெட் (Cricket)
டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருது வெல்வாரா ஷபாலி வர்மா?
- சிறந்த வீரருக்கான பரிந்துரை பட்டியலில் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் இடம்பெற்றுள்ளார்.
- சிறந்த வீராங்கனைக்கான பட்டியலில் இந்திய வீராங்கனை ஷபாலி வர்மா இடம்பிடித்துள்ளார்.
துபாய்:
ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்து அவர்களுக்கு விருது வழங்கி ஐசிசி கவுரவித்து வருகிறது.
இந்நிலையில், டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்வதற்கான பரிந்துரை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
அதன்படி, டிசம்பர் மாத சிறந்த வீரர் விருதுக்கான பெயர் பட்டியலில் வெஸ்ட் இண்டீசின் ஜஸ்டின் கிரீவ்ஸ், ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க், நியூசிலாந்தின் ஜேக்கப் டஃபி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அதேபோல் டிசம்பர் மாத சிறந்த வீராங்கனை விருதுக்கான பெயர் பட்டியலில் இந்தியாவின் ஷபாலி வர்மா, தென் ஆப்பிரிக்காவின் லாரா வால்வோர்ட் மற்றும் சுனே லூஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இவர்களில், டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் சிறந்த வீராங்கனையை தேர்வு செய்து அறிவிக்கப்படும்.