கிரிக்கெட் (Cricket)

தோல்விக்கு நானும் ஒரு காரணம்.. அடுத்த உலக கோப்பையில் விளையாட மாட்டேன்- அலிசா ஹெலி

Published On 2025-10-31 13:08 IST   |   Update On 2025-10-31 13:08:00 IST
  • இந்த இலக்கை நிர்ணித்த போது பாதி வேலை முடிந்து விட்டது என்று தான் நினைத்தேன்.
  • தோல்வி அடைந்து பேசும் இடத்தில் நான் இருப்பது கொஞ்சம் வினோதமாக தான் இருக்கின்றது.

மும்பை:

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆன ஆஸ்திரேலிய அணி இந்தியாவிடம் தோல்வியை தழுவி தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறது. ஆஸ்திரேலிய அணி 339 ரன்களை இலக்காக நிர்ணயித்தும் இந்திய அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருக்கிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய மகளிர் அணி கேப்டன் அலிசா ஹெலி,

இந்த போட்டி மிகவும் அற்புதமாக இருந்தது. ஆனால் இந்த தோல்விக்கு நாங்கள் தான் காரணம் எங்களுடைய அணியின் பேட்டிங்கை நாங்கள் சிறப்பாக முடிக்கவில்லை. இதே போல் எங்களுடைய பந்துவீச்சும் சிறப்பாக இல்லை. சில கேட்ச்களையும் நாங்கள் தவறவிட்டோம்.

இறுதியில் தோல்வியை தழுவியது மிகவும் ஏமாற்றமாக இருக்கின்றது. பல வாய்ப்புகளை உருவாக்கினோம். ஆனால் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள தெரியவில்லை. அதற்கு நானும் ஒரு காரணம் என்று தான் சொல்வேன்.

இந்த இலக்கை நிர்ணித்த போது பாதி வேலை முடிந்து விட்டது என்று தான் நினைத்தேன். கூடுதலாக சில ரன்ளை அடித்திருக்க வேண்டும். இந்தியா வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்டார்கள். நெருக்கடியான சமயத்தில் அபாரமாக பேட்டிங் செய்து வெற்றியை தாண்டி விட்டார்கள்.

தோல்வி அடைந்து பேசும் இடத்தில் நான் இருப்பது கொஞ்சம் வினோதமாக தான் இருக்கின்றது. இனி அடுத்த உலக கோப்பை நோக்கி திட்டங்களை தீட்ட வேண்டியது தான். அடுத்த உலகக்கோப்பை நிச்சயம் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும் என்று நினைக்கின்றேன். ஆனால் கண்டிப்பாக அடுத்த உலகக் கோப்பையில் நான் விளையாட மாட்டேன்.

மகளிர் கிரிக்கெட் விளையாடுவதில் எங்களுக்கு பெருமை . ஆனால் இந்த போட்டியில் தோல்விக்கு நாங்கள்தான் காரணம். கண்டிப்பாக எங்கள் தவறிலிருந்து பாடம் கற்றுக் கொள்வோம்.

என்று அலிசா ஹெலி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News