கிரிக்கெட் (Cricket)

'திருமணமான 2வது மாதத்திலேயே என்னை ஏமாற்றினார்' - தனஸ்ரீ குற்றச்சாட்டிற்கு சாஹல் விளக்கம்

Published On 2025-10-08 14:13 IST   |   Update On 2025-10-08 14:13:00 IST
  • சாஹல், தனஸ்ரீ தம்பதி கருத்து வேறுபாடு காரணமாக 2 ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்தனர்.
  • சாஹல், தனஸ்ரீக்கு ரூ. 4.75 கோடி ஜீவனாம்சம் வழங்கியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் நடனக் கலைஞரான தனஸ்ரீ வர்மாவை 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதன் பின் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் இரண்டு ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்தனர். இதையடுத்து, இருவரும் விவாகரத்து கோரி மும்பை குடும்ப நீதிமன்றத்தை நாடினார்கள்.

இவர்கள் இருவரும் ஏற்கனவே 18 மாதங்கள் பிரிந்து வாழ்ந்துவிட்டதால், நீதிமன்றம் மார்ச் மாதம் விவாகரத்து கொடுத்தது. மேலும், கிரிக்கெட் வீரர் தனஸ்ரீக்கு ரூ. 4.75 கோடி ஜீவனாம்சம் வழங்கியுள்ளார்.

இவர்கள் இருவரும் பிரிந்த பிறகு யுஸ்வேந்திர சாஹலின் ரசிகர்கள் தனஸ்ரீ வர்மாவை இணையத்தில் கடுமையாக விமர்சனம் செய்து கேலி செய்து வந்தனர்.

இதனிடையே நிகழ்ச்சி ஒன்றில் தனது விவாகரத்து குறித்து பேசிய தனஸ்ரீ வர்மா, "சஹாலுடன் திருமணம் ஆன இரண்டு மாதத்திலேயே இந்த உறவு நீடிக்காது என்று கண்டுபிடித்துவிட்டேன். அவர் என்னை ஏமாற்றுகிறார் என்று இரண்டு மாதத்திலேயே தெரிந்துவிட்டது. திருமண உறவு நீடிக்க வேண்டும் என்று கொஞ்சம் நான் பொறுமையாக இருந்தேன்" என்று தெரிவித்தார்.

இந்நிலையில், தனஸ்ரீ குற்றச்சாட்டு குறித்து பேசிய சாஹல், "நான் ஒரு விளையாட்டு வீரன். நான் ஏமாற்றவில்லை. நான் ஏமாற்றியதை நீங்கள் 2 ஆவது மாதத்திலேயே கண்டுபிடித்திருந்தால் அந்த உறவு எப்படி நீடிக்கும்? எனக்கு, இந்த அத்தியாயம் முடிந்துவிட்டது. நான் இதனை கடந்து முன்னேறி செல்கிறேன். நான் மீண்டும் இதை பற்றிப் பேச விரும்பவில்லை. நான் என் வாழ்க்கையிலும் என் விளையாட்டிலும் கவனம் செலுத்தவுள்ளேன்" என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News