null
ஒருபக்கம் 9 விக்கெட்டுகள் இழப்பு.. மறுபக்கம் 82 பந்தில் சதம் - ஐகானிக் இன்னிங்ஸ் ஆடிய ஹாரி புரூக்
- 10 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து தடுமாறியது
- 166 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இங்கிலாந்து இழந்தது.
இங்கிலாந்து அணி டி20, ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. டி20 தொடரை 1 - 0 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது.
இன்று இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 10 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், களமிறங்கிய கேப்டன் ஹாரி புரூக் நங்கூரமிட்டு அதிரடியாக விளையாடினார். ஒருபக்கம் விக்கெட்டுகள் விழுந்த நிலையிலும் ஹாரி புரூக் ஸ்கோர்கார்டை உயர்த்தினார்.
மற்ற பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழக்க ஜேமி ஓவர்டன் 46 ரன்கள் அடித்து அவுட்டானார்.
166 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இங்கிலாந்து இழந்த நிலையில், கேப்டன் ஹாரி புரூக் மட்டும் அதிரடியாக விளையாடி 82 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து அதிரடியாக விளைய அவர் 101 பந்துகளில் 135 ரன்கள் அடித்து அவுட்டானார். இதனால் 35.2 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 223 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
9 விக்கெட்டுகள் விழுந்த நிலையிலும் அதிரடியாக விளையாடி ஹாரி புரூக் அடித்த சதம் ஒருநாள் கிரிக்கெட்டின் சிறந்த சதங்களில் ஒன்றாக வரலாற்றில் முத்திரை படைத்தது.