கிரிக்கெட் (Cricket)
null

இந்திய அணிக்கு ஆசிய கோப்பையை வழங்க மறுத்த பாகிஸ்தான் அமைச்சருக்கு தங்கப்பதக்கம்..

Published On 2025-10-05 17:19 IST   |   Update On 2025-10-05 17:24:00 IST
  • அவரிடம் இருந்து ஆசிய கோப்பையை வாங்குவதில்லை என்று இந்திய அணி தெரிவித்திருந்தது.
  • இந்தியாவுக்கு கொண்டு வர பிசிசிஐ முயன்று வருகிறது.

கடந்த செப்டம்பர் 28 அன்று துபாயில் நடந்த ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆசிய கோப்பையை கைப்பற்றியது.

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சருமான மோஹ்சின் நக்வி கோப்பையை வழங்க முன்வந்தார். ஆனால் அவரிடம் இருந்து ஆசிய கோப்பையை வாங்குவதில்லை என்று இந்திய அணி தெரிவித்திருந்தது.

மற்றொரு நிகழ்ச்சி வைத்து அதில் தனது கைகளால்தான் கோப்பையை வழங்குவேன் என்றுகூறிய நக்வி, கோப்பையை தன்னுடன் எடுத்துச் சென்றார்.

கோப்பை தற்போது ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரியம் வசம் உள்ளது. அதை இந்தியாவுக்கு கொண்டு வர பிசிசிஐ முயன்று வருகிறது.

இந்நிலையில் இந்தியாவுக்கு கோப்பையை வழங்க மறுத்ததற்காக மோஹ்சின் நக்விக்கு பாகிஸ்தான் அரசு தங்கப் பதக்கம் வழங்கி கௌரவிக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிந்து மற்றும் கராச்சி கூடைப்பந்து தலைவர் குலாம் அப்பாஸ் ஜமால், கராச்சியில் நடக்க உள்ள ஒரு விருந்து விழாவில் நக்விக்கு பதக்கம் வழங்கப்படும் என்று கூறியுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 

Tags:    

Similar News