கிரிக்கெட் (Cricket)

லெஃப் ஆர்ம் ஸ்பின்னரை எதிர்கொள்ள இடது கை பேட்ஸ்மேனாக முயற்சிக்கும் கிளென் பிலிப்ஸ்

Published On 2026-01-06 19:15 IST   |   Update On 2026-01-06 19:15:00 IST
  • நியூசிலாந்து கிளென் பிலிப்ஸ் தலைசிறந்த பீல்டர் ஆவார்.
  • இவர் வலது கை பேட்டிங் பழக்கம் கொண்டனர்.

நியூசிலாந்து அணியின் தலைசிறந்த பீல்டராகவும், பேட்ஸ்மேனாகவும் திகழ்ந்து வருபவர் கிளென் பிலிப்ஸ். இவர் வலது கை பேட்டிங் பழக்கம் கொண்டவர். டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் இந்த மாதம் கடைசியில் இந்தியாவில் தொடங்குகிறது.

இந்தியாவில் உள்ள ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். வலது கை பேட்ஸ்மேன்கள் லெஃப்ட் ஆர்ம் ஸ்பின்னர்களை எதிர்கொள்ள திணறுவார்கள். இதனால் வலது கை பேட்ஸ்மேனான பிலிப்ஸ், இடது கை பேட்ஸ்மேனாக முயற்சி மேற்கொண்டு வருகிறார். லெஃப் ஆர்ம் ஸ்பின்னர் பந்து வீசும்போது இடது கை பேட்ஸ்மேனாக விளையாட முடிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக கிளென் பிலிப்ஸ் கூறியதாவது:-

எனது இடது கை பேட்டிங் பயிற்சியை மகிழ்ச்சியாக செய்து வருகிறேன். உண்மையிலே, அதை பல காரத்திற்காக செய்கிறேன். முதலில் இரண்டு கைகளும், மூளையின் இரண்டு பக்கங்களும் வேலை செய்வதற்காக. ஆனால், ஒருவேளை ஏதேனும் ஒரு கட்டத்தில் இடது கை சுழற்பந்து வீச்சை எதிர்கொண்டு சமாளிப்பதற்கான வாய்ப்பிற்காகவும் கூட.

வலது, இடது என இரண்டு பக்கமும் பேட்டிங் செய்வதற்கு இரண்டு ஆண்டு காலம் எடுத்துக் கொண்டது. இது எதிர்காலத்திற்கான ஒரு விசயம்.

ஆனால், நிறைய இடது கை பந்துவீச்சு இருக்கப்போகும் ஒரு போட்டியில் அந்த வாய்ப்பு கிடைத்ததால், அதை முயற்சி செய்து பார்க்க, அந்தப் போட்டிக்கு முந்தைய பயிற்சி ஓரளவிற்குப் பொருத்தமாக இருந்தது என்று நினைக்கிறேன். மேலும், அந்தப் போட்டியின்போது அதை பயன்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைத்தது மிகவும் சிறப்பாக இருந்தது.

பந்தை முடிந்தவரை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். அதை நான் முடிந்தவரை செய்துள்ளேன். அதற்கான தயார்படுத்துதலை செய்துள்ளேன். அதனால் பலனளிக்காமல் இருக்க எந்தக் காரணமும் இல்லை.

இவ்வாறு கிளென் பிலிப்ஸ் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News