கிரிக்கெட் (Cricket)

விஜய் ஹசாரே டிராபி: இரட்டை சதம் விளாசிய அமன்ராவ் பெரலா

Published On 2026-01-06 14:28 IST   |   Update On 2026-01-06 14:28:00 IST
  • டாஸ் வென்ற வங்காளம் அணி பவுலிங் தேர்வு செய்தது.
  • முதலில் ஆடிய ஐதராபாத் அணி 50 ஓவரில் 352 ரன்கள் குவித்தது.

ராஜ்கோட்:

விஜய் ஹசாரே டிராபி தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. பி பிரிவில் நடந்த லீக் போட்டியில் ஐதராபாத், வங்காளம் ஆகிய அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்காளம் அணி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, ஐதராபாத் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அமன்ராவ் பெரலா தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினார்.

முதல் விக்கெட்டுக்கு ராகுல் சிங், அமன்ராவ் பெரலா ஜோடி 104 ரன்கள் சேர்த்தது. ராகுல் சிங் 65 ரன்னில் அவுட்டானார்.

கேப்டன் திலக் வர்மா 34 ரன்னிலும், அபிராத் ரெட்டி 5 ரன்னிலும், பிரக்ஞய் ரெட்டி 22 ரன்னிலும், பிரணவ் வர்மா 7 ரன்னிலும் அவுட்டாகினர்.

ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் பொறுப்புடன் ஆடிய அமன்ராவ் பெரெலா இரட்டை சதமடித்து அசத்தினார்.

இறுதியில், ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் குவித்தது. அமன்ராவ் பெரலா 200 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

Tags:    

Similar News