கிரிக்கெட் (Cricket)

ஹர்பஜன் சிங்- ஸ்ரீசந்த் இடையே நடந்தது என்ன?- 17 வருடமாக யாரும் பார்க்காத வீடியோவை வெளியிட்ட லலித் மோடி..!

Published On 2025-08-29 16:57 IST   |   Update On 2025-08-29 16:57:00 IST
  • போட்டி முடிந்த பிறகு ஹர்பஜன் சிங் ஸ்ரீசந்தை தாக்கினார்.
  • ஹர்பஜன் சிங் மீது கடும் விமர்சனம் வைக்கப்பட்டது.

ஐபிஎல் டி20 லீக் தொடர் 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ்- பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி முடிவடைந்த நிலையில், வீரர்கள் பரஸ்பர கைக்கலுக்களில் ஈடுபட்டனர். அப்போது ஹர்பஜன் சிங்- ஸ்ரீசந்த் இடையே தகராறு ஏற்பட்டது. ஹர்பஜன் சிங் ஸ்ரீசந்த் கன்னத்தில் அறைந்தார். இந்த விவகாரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. சீனியர் வீரரான ஹர்பஜன் சிங் நடத்தை கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இருந்தபோதிலும் ஸ்ரீசந்த் கன்னத்தில் ஹர்பஜன் சிங் அறைந்தது தொடர்பான வீடியோ வெளியாகவில்லை. இந்த நிலையில் ஸ்ரீசந்த்-ஐ ஹர்பஜன் சிங் தாக்கும் வீடியோவை லலித் மோடி வெளியிட்டுள்ளார்.

2008ஆம் ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும்- மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராகவும் நடைபெற்ற போட்டிக்குப் பிறகு ஹர்பஜன் சிங்- ஸ்ரீசந்த் இடையில் என்ன நடந்தது என்பது 17 வருடமாக யாரும் பார்க்கவில்லை. இன்று வரை பார்க்கவில்லை என லலித் மோடி அந்த சம்பவ வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அப்போது லலித் மோடி ஐபிஎல் போட்டிக்கான தலைவராக இருந்தார். இவர் பணமோசடியில் ஈடுபட்டதாக வழக்கு தொடரப்பட்டது. இதனால் இந்தியாவில் இருந்து தப்பியோடி வெளிநாட்டில் வசித்து வருகிறார்.

Tags:    

Similar News