கிரிக்கெட் (Cricket)

வீடியோ: தீவிர வலை பயிற்சியில் இந்திய அணி.. ஒருநாள் தொடருக்கான கோப்பையுடன் கேப்டன்கள்

Published On 2025-10-18 13:33 IST   |   Update On 2025-10-18 13:33:00 IST
  • விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் 7 மாத இடைவெளிக்கு பிறகு களம் திரும்புகின்றனர்.
  • ஒருநாள் போட்டி நாளை தொடங்க உள்ள நிலையில் இந்திய அணி வீரர்கள் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெர்த்:

இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 5 20 போட்டியில் விளையாட ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெர்த்தில் நாளை நடக்கிறது. டெஸ்ட் மற்றும் டி20 போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட இந்திய நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் 7 மாத இடைவெளிக்கு பிறகு களம் திரும்புகின்றனர்.

இந்த நிலையில், ஒருநாள் போட்டி நாளை தொடங்க உள்ள நிலையில் இந்திய அணி வீரர்கள் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பான வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

மேலும் ஒருநாள் தொடருக்கான கோப்பையுடன் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்லும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ்-ம் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இரு அணிகளும் ஒருநாள் போட்டியில் நாளை மோதுவது 153-வது முறையாகும். இதுவரை நடைபெற்ற 152 ஆட்டத்தில் இந்தியா 58-ல், ஆஸ்திரேலியா 84-ல் வெற்றி பெற்றுள்ளன. 10 ஆட்டம் முடிவு இல்லை.

இரு அணிகள் இடையே கடைசியாக 2023-ல் இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆஸ்திரேலியாவில் கடைசியாக 2020-ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. 

Tags:    

Similar News