கிரிக்கெட் (Cricket)
பாகிஸ்தானில் விளையாடுவதற்காக ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய டு பிளெசிஸ்
- மினி ஏலத்தில் பங்குபெற போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
- கடந்த சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக 9 போட்டிகளில் விளையாடி 202 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
ஐபிஎல் 2026 சீசனுக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 16-ம் தேதி அபுதாபியில் நடைபெறவுள்ள நிலையில் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக ஃபாப் டு பிளெசிஸ் அறிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடருக்கு பதிலாக பாகிஸ்தானில் நடைபெறும் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் விளையாட அவர் ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
14 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் அவர் வருவிருக்கும் மினி ஏலத்தில் பங்குபெற போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் தென்னாப்பிரிக்க கேப்டனும், சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தவருமான ஃபாப் டு பிளெசிஸுக்கு இப்போது வயது 41.
கடந்த சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக 9 போட்டிகளில் விளையாடி 202 ரன்கள் மட்டுமே எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.