கிரிக்கெட் (Cricket)

அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால்- முதல்நாள் உணவு இடைவேளை வரை 2 விக்கெட்டுகளை இழந்த இந்தியா

Published On 2025-07-02 17:53 IST   |   Update On 2025-07-02 17:53:00 IST
  • ஜெய்ஸ்வால் 62 ரன்களுடன் விளையாடி வருகிறார்.
  • இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.

இங்கிலாந்து- இந்தியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேஎல் ராகுல்- ஜெய்ஸ்வால் களமிறங்கினர். தொடக்கம் முதலே தடுமாறிய கேஎல் ராகுல் 26 பந்துகள் சந்தித்து 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து ஜெய்ஸ்வாலுடன் கருண் நாயர் ஜோடி சேர்ந்தார். இருவரும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடியாக விளையாடி ஜெய்ஸ்வால் பவுண்டரி விளாசி தனது அரை சதத்தை பதிவு செய்தார்.

முதல் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளைக்கு 2 ஓவர்கள் மீதம் இருந்த நிலையில் எக்ஸ்ட்ரா பவுன்ஸ் பந்தில் கருண் நாயர் ஆட்டமிழந்தார். அவர் 50 பந்தில் 31 ரன்கள் எடுத்தார். இதில் 5 பவுண்டரிகள் அடங்கும்.

இதனால் முதல் நாள் உணவு இடைவேளை வரை இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 98 ரன்கள் எடுத்துள்ளது. ஜெய்ஸ்வால் 62 ரன்களுடனும் சுப்மன் கில் 1 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.

Tags:    

Similar News