கிரிக்கெட் (Cricket)

ஒருமுறை அல்ல 2 முறை... இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி சாதனை

Published On 2025-06-25 08:16 IST   |   Update On 2025-06-25 08:16:00 IST
  • 2-வது இன்னிங்சில் 373 ரன்களை குவித்து இங்கிலாந்து வெற்றி பெற்றது
  • அதிகபட்சமாக பென் டக்கெட் 149 ரன்கள் குவித்தார்.

இங்கிலாந்து - இந்தியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்சில் நடந்தது.

இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் எடுத்தன. பின்னர் 6 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சில் 364 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது.

இதனையடுத்து 371 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 373 ரன்களை குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக பென் டக்கெட் 149 ரன்கள் குவித்தார்.

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் 1 - 0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை பெற்றுள்ளது.

மேலும், இந்த போட்டியில் வென்றதன் மூலம் டெஸ்ட்டில் இந்திய அணிக்கு எதிராக 350க்கும் அதிகமான ரன்களை சேஸிங் செய்த ஒரே அணி என்ற சாதனையை இங்கிலாந்து இருமுறை படைத்துள்ளது.

2022 ஆம் ஆண்டு பர்மிங்காமில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 378 ரன்கள் அடித்து

வெற்றி பெற்றிருந்த நிலையில், லீட்ஸ் டெஸ்டில் இந்தியா நிர்ணயித்த 371 ரன்கள் இலக்கையும் எட்டி இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது.

Tags:    

Similar News