கிரிக்கெட் (Cricket)

பாபா அபராஜித் அதிரடி: முதல் வெற்றியைப் பதிவு செய்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

Published On 2025-06-06 22:35 IST   |   Update On 2025-06-06 22:35:00 IST
  • டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
  • முதலில் ஆடிய திருப்பூர் தமிழன்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 173 ரன்கள் எடுத்தது.

கோவை:

தமிழ்நாடு பிரீமியர் லீக் சீசன் நேற்று தொடங்கியது. இன்று கோவையில் நடைபெறும் 2-வது லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. துஷார் ரஹேஜா சிறப்பாக விளையாடி 43 பந்தில் 7 பவுண்டரி, 5 சிக்சருடன் 79 ரன்கள் குவித்தார். பிரதோஷ் ரஞ்சன் பால் 28 பந்தில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சார்பில் அபிஷேக் தன்வர், விஜய் சங்கர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதையடுத்து, 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்ல்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் மோஹித் ஹரிஹரன் அதிரடியாக ஆடி 22 பந்தில் 46 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

கேப்டன் பாபா அபராஜித் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். அவருக்கு விஜய் சங்கர் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.

இறுதியில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 16 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. பாபா அபராஜித் 48 பந்தில் 77 ரன்னும், விஜய் சங்கர் 23 பந்தில் 41 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

Tags:    

Similar News