கிரிக்கெட் (Cricket)

மத்திய ஒப்பந்த பட்டியல் A+ பிரிவில் விராட், ரோகித்: மீண்டும் இடம் பிடித்த ஷ்ரேயாஸ்- வெளியான தகவல்

Published On 2025-04-01 13:07 IST   |   Update On 2025-04-01 13:07:00 IST
  • அனைத்து வடிவங்களிலும் விளையாடும் வீரர்களுக்கு மட்டுமே A+ பிரிவில் இடம் பெறுவார்கள்
  • கோலி, ரோகித் ஆகியோர் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும் A+ பிரிவில் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்திய ஆண்கள் அணிக்கான வருடாந்திர மத்திய ஒப்பந்த பட்டியலில் ரோகித், கோலி ஆகியோர் A+ பிரிவில் தக்கவைக்கப்பட உள்ளனர். இது அனைத்து வடிவங்களிலும் விளையாடும் வீரர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்ட மிக உயர்ந்த மற்றும் பொதுவான பிரிவாகும்.

ஆனால் கோலி, ரோகித் ஆகியோர் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும் A+ பிரிவில் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில் உள்ளூர் போட்டிகளை தவறவிட்டதாக கூறப்பட்டு முந்தைய மத்திய ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட ஷ்ரேயாஸ் மீண்டும் பட்டியலில் மீண்டும் இடம் பெறுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News