கிரிக்கெட் (Cricket)

இன்னிங்ஸ் தோல்வி எதிரொலி... வங்கதேச டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார் ஷாண்டோ

Published On 2025-06-28 13:59 IST   |   Update On 2025-06-28 13:59:00 IST
  • இலங்கைக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது.
  • டெஸ்ட் தொடரை 1 - 0 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியுள்ளது.

இலங்கை- வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் கொழும்பில் (எஸ்எஸ்சி) கடந்த 25ஆம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது. இலங்கையின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 247 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை 458 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் பதுன் நிசாங்கா 158 ரன்கள் விளாசினார். குசால் மெண்டிஸ் 84 ரன்களும், தினேஷ் சண்டிமல் 93 ரன்களும் சேர்த்தனர்.

பின்னர் 211 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2ஆவது இன்னிங்சை ஆடிய வங்கதேசம் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து 133 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதன்மூலம் இன்னிங்ஸ் மற்றும் 78 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் டிராவில் முடிந்த நிலையில், 2 ஆவது டெஸ்டில் வெற்றி பெற்று 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1 - 0 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியுள்ளது.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து வங்கதேச டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து நஜ்முல் உசைன் ஷாண்டோ விலகினார்.

இது குறித்து பேசிய நஜ்முல் உசைன் ஷாண்டோ, "டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியது என்னுடைய தனிப்பட்ட முடிவு. 3 ஃபார்மட்களுக்கு 3 கேப்டன் என்ற நடைமுறை சரியென எனக்குத் தோன்றவில்லை" என்று தெரிவித்தார்.

தற்போது வங்கதேச னையின் ஒருநாள் கேப்டனாக மெஹ்தி ஹசன் மிராஸ் மற்றும் டி20 கேப்டனாக லிட்டன் தாஸ் தற்போது செயல்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News