கிரிக்கெட் (Cricket)

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: பல மாற்றங்கள் செய்த ஆஸ்திரேலியா

Published On 2025-10-24 14:29 IST   |   Update On 2025-10-24 14:29:00 IST
  • வருகிற 29-ந் தேதி இரு அணிகளுக்கு இடையே டி20 தொடர் நடைபெற உள்ளது.
  • ஹசில்வுட் முதல் 2 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார்.

ஆஸ்திரேலியா- இந்தியா அணிகள் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் நாளை கடைசி போட்டி நடைபெற உள்ளது.

இதனையடுத்து வருகிற 29-ந் தேதி இரு அணிகளுக்கு இடையே டி20 தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றடைந்தது.

இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் இறுதியில் ஆஷஸ் தொடர் தொடங்க இருப்பதால் சீனியர் வீரர்களான ஹசில்வுட், லெபுசென் ஆகியோர் அதற்கு தயாராகும் வகையில் கழற்றி விடப்பட்டுள்ளனர். அதன்படி ஹசில்வுட் முதல் 2 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார். லெபுசென் கடைசி ஒருநாள் போட்டி மற்றும் டி20 தொடரில் இடம் பெறவில்லை.

மேலும் ஜோஷ் பிலிப் அனைத்து டி20 போட்டிகளிலும் விளையாடுவார். டுவார்ஷுயிஸ் 4,5 போட்டிகளிலும், மஹ்லி பியர்ட்மேன் 3,4,5 டி20 போட்டிகளிலும் சீன் அபோட் முதல் 3 டி20 போட்டிகளிலும் மட்டுமே விளையாடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News