கிரிக்கெட் (Cricket)

வீடியோ: முதல் 13 பந்தில் 12 ரன்.. கடைசி 16 பந்தில் 53 ரன்.. 38 வயதில் பொலந்துகட்டிய பொல்லார்ட்

Published On 2025-09-02 15:22 IST   |   Update On 2025-09-02 15:22:00 IST
  • பொல்லார்ட் முதல் 13 பந்தில் 12 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.
  • கடைசி 8 பந்தில் 7 சிக்சர்கள் அடித்து அசத்தினார்.

கரீபியன் பிரீமியர் லீக் வெஸ்ட் இண்டீஸில் கடந்த ஆகஸ்டு 14-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற 19-வது லீக் ஆட்டத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் செயின்ட் கிட்ஸ் & நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின.

இதில் முதலில் பேட்டிங் செய்த பூரன் தலைமையிலான டிரின்பாகோ அணி 20 ஓவரில் 179 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பொல்லார்ட் 29 பந்தில் 65 ரன்கள் எடுத்தார். இதில் 8 சிக்சர்கள் அடங்கும். முதலில் மந்தமாக விளையாடிய பொல்லார்ட் முதல் 13 பந்தில் 12 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.

இதனையடுத்து ருத்ரதாண்டவம் ஆடிய அவர், கடைசி 16 பந்தில் 53 ரன்கள் விளாசினார். குறிப்பாக கடைசி 8 பந்தில் 7 சிக்சர்கள் அடித்து அசத்தியுள்ளார். 38 வயதில் இந்த அடி அடிப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இவரை மும்பை இந்தியன்ஸ் அணியில் கூட பேட்டராக தேர்வு செய்யலாம் எனவும் பல ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இதனையடுத்து களமிறங்கிய நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணி 20 ஓவர்களில் 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் டிரின்பாகோ அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Tags:    

Similar News